காங்., வெடி சம்பவத்தில் ஒருவர் பலி

Added : மே 19, 2019
Advertisement

பெங்களூரு:பெங்களூரு, ஆர்.ஆர்.நகர், காங்கிரஸ், எம்.எல்.ஏ., வீட்டு முன், பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில், அவரது வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் பலியானார்.
பெங்களூரு, ஆர்.ஆர்.நகர் தொகுதி, காங்கிரஸ், எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்கள் திரைப்பட தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் உள்ளார். பெங்களூரு, வயாலி காவல் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.அவரது வீட்டு முன், கார்கள் நிறுத்துவதற்காக, தனிப்பகுதியை கட்டியுள்ளார். இந்த பகுதியில், நேற்று காலை, 9:15 மணிக்கு, வெடிகுண்டு வெடித்தது போல, பலத்த சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.மர்ம பொருள் வெடித்த இடத்தில், எம்.எல்.ஏ., கார் முன், ஒருவர் உடல் சிதறி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, வயாலி போலீசார், அங்கு வந்து ஆய்வு செய்தனர். விசாரணையில், எம்.எல்.ஏ., முனிரத்னா வீட்டில் பணிபுரியும், வெங்கடேஷ், 48, என்பவர், இச்சம்பவத்தில் உயிரிழந்தது, தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள், வெடிப்பில் சிதறிய பொருட்களை சேகரித்து, ஆய்வுக்கு கொண்டு சென்றார்.பெங்களூரு, மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர், தேவராஜ் கூறியதாவது:பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தும் ரசாயன பொருளால், இச்சம்பவம் நடந்திருக்கலாம் என, கருதுகிறோம். தடயவியல் ஆய்வு அறிக்கை வந்த பின், முறையான காரணம் தெரியும். தேசிய புலனாய்வு பிரிவு உட்பட அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X