செய்தி சில வரிகளில்...

Added : மே 19, 2019
Advertisement

ஆஸ்திரேலியாவில்ஆளும் கட்சி வெற்றி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டில், கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி, பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான, பழமைவாத கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம், 151 உறுப்பினர்கள் உடைய பார்லிமென்டில், 74 தொகுதிகளில், ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு, 66 இடங்களே கிடைத்துள்ளன. கருத்துக் கணிப்புகளில், தொழிலாளர் கட்சி, அபார வெற்றி பெறும் எனக், கூறப்பட்டிருந்தது.
ஜம்மு - காஷ்மீரில்பி.எஸ்.எப்., வீரர் காயம்
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், எல்லையோர பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர், நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், நம் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பாக்., தாக்குதலுக்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
பாலியல் பலாத்காரம்யு.ஜி.சி., கண்டிப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றம் உயர் கல்வி நிறுவனங்களில், பாலியல் பலாத்காரம் தொடர்பாக, எவ்வளவு புகார்கள் வந்தன என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும், றாபல்கலை மானிய குழு, அறிக்கை கேட்டுள்ளது.'பாராகிளைடிங்' பயிற்சிஒருவர் பலிசிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில், 'பாராகிளைடிங்' பயிற்சியில் ஈடுபட்டிருந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, அமன்தீப் சிங், 24, மேலே இருந்து விழுந்ததில், பரிதாபமாக இறந்தார்; மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X