பொது செய்தி

தமிழ்நாடு

தனிநபர் இல்ல கழிப்பிடம்; மாநகரில் 5 ஆயிரம் பேர் பயன்

Added : மே 19, 2019
Advertisement

திருப்பூர் : மாநகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தனி நபர் இல்லக்கழிப்பிடம் கட்டும் திட்டத்தில், இதுவரை, 5,365 பேர் பயனடைந்துள்ளனர்.

திறந்தவெளி கழிப்பிடத்தால், நோய் பரவும் அபாயம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்க, மத்திய அரசு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தனிநபர் இல்ல கழிப்பறை அமைக்கும் திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. இதற்கான பணிகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தேர்வாகும் பயனாளிகளுக்கு, மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் தலா, 2,000 ரூபாய், துாய்மை இந்தியா திட்டத்தில், 4,000 ரூபாய் என, மொத்தம், 8,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. துவக்கத்தில், சுணக்கம் கண்ட இத்திட்டம் குறித்து, மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மானியம் போக, தங்களது பங்களிப்பை செலுத்த முடியாமல் பலரும் திணறிய நிலையில், தன்னார்வ அமைப்பினர், நிதியுதவி செய்ய முன்வந்தனர்; அதன் விளைவாக, தனிநபர் கழிப்பிட கட்டுமானப் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், குடியிருப்பு வசதி இருந்தும் கழிப்பிட வசதி இல்லாத, 5,932 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில், இதுவரை, 5,365 பயனாளிகளுக்கு கழிப்பிடம் கட்டித்தரப்பட்டுள்ளது. 'எஞ்சிய பயனாளிகளுக்கு, நடப்பு நிதியாண்டுக்குள் கழிப்பிடம் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X