பொது செய்தி

இந்தியா

கர்நாடக வாக்காளர்கள் அதீத ஆர்வம்

Added : மே 19, 2019
Advertisement

சிஞ்சோலி - 70; குந்த்கோல் - 81 சதவீதம்

தார்வாட்:கர்நாடகத்தின் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று அமைதியான முறையில் இடைத்தேர்தல் நடந்தது. சிஞ்சோலியில், 70.30 சதவீதமும்; குந்த்கோலில், 81.33 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின.
காங்கிரசின் நகராட்சி துறை அமைச்சராக இருந்த சி.எஸ்.சிவள்ளி மறைவால் காலியான, தார்வாடின் குந்த்கோல்; எம்.எல்.ஏ., பதவியை உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்ததால் காலியான, கலபுரகியின் சிஞ்சோலி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று இடைத்தேர்தல் நடந்தது.குந்த்கோலில், காங்கிரசின் குஸ்மா, பா.ஜ.,வின் சிக்கன்னகவுடர்; சிஞ்சோலியில், காங்கிரசின் சுபாஷ் ராத்தோட், பா.ஜ.,வின் அவிநாஷ் ஜாதவ் உட்பட, இரு தொகுதிகளிலும், 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.குந்த்கோலில், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 444 வாக்காளர்களும்; சிஞ்சோலியில், ஒரு லட்சத்து, 93 ஆயிரத்து, 869 வாக்காளர்களும் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர்.நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக, குந்த்கோலில் 214, சிஞ்சோலில் 241 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.இரு தொகுதிகளிலுமே காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்ட பின், ஓட்டு போட்டனர்.
குந்த்கோலில், கணவர் சமாதிக்கு பூஜை செய்த பின், காங்கிரஸ் வேட்பாளர் குஸ்மா ஓட்டுப்போட்டார்.குந்த்கோலின் சில இடங்களில் மாலை, 6:00 மணியை தாண்டியும், வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு ஓட்டு போட வாய்ப்பளிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் கடும் வெயில் அடித்தாலும், அதை பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.குந்த்கோலில், 81.33 சதவீதமும்; சிஞ்சோலியில், 70.30 சதவீதமும் ஓட்டுகள் பதிவு ஆகியுள்ளன. அமைதியான முறையில் தேர்தல் நடந்தது.ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததால், மின்னணு இயந்திரங்களும், 'வி.வி., பேட்'களும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டன. மையத்தை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X