பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விளைச்சல் குறைவு; விலை உயர்வால் நுகர்வோர் 'ஷாக்'

Added : மே 19, 2019
Advertisement

திருப்பூர் : காய்கறிகளின் விளைச்சல் குறைந்தால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், பல்லடம் சுற்றுப்புற கிராமங்களில் கத்தரி, வெண்டை, பீட்ரூட், முருங்கை பீன்ஸ், செடி அவரை, தக்காளி, காளிபிளவர், முள்ளங்கி, சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பிற மாவட்டம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தாண்டின் துவக்கம் முதல் போதியளவு மழை பெய்யாததால், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது; இதனால், வறட்சி நிலவி வருகிறது. விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாமல் காய்கறி சாகுபடி பரப்பும் தரிசாக மாறியுள்ளது. பருவமழை பொய்ப்பு, பயிர்களில் நோய் தாக்குதல், விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். காய்கறி வரத்து குறைந்ததால், சந்தையில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில்,''கோடை வெயிலின் தாக்கத்தால், காய்கறி செடிகள் பூக்கும் தன்மையை இழந்து காணப்படுகின்றன. ஏற்கனவே, பூ பூத்த செடிகளும் கருகி விடுகின்றன. புழுக்கத்தின் காரணமாக பூச்சி தாக்குதலும் அதிகரிக்கிறது. இதனால், காய்ப்பு தன்மை குறைந்து, விளைச்சல் பாதிக்கிறது; காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது,'' என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் விளையக்கூடிய கத்தரிக்காய், 12 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாக அதிகரித்துள்ளது; அவரைக்காய், 30 ரூபாயில் இருந்து, 50 ரூபாய், மிளகாய், 15 ரூபாயில் இருந்து, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஊட்டி உட்பட பிற இடங்களில் இருந்து தருவிக்கப்படும் தக்காளி, கிலோ 40, பீன்ஸ், 110, காரட், 35, முள்ளங்கி 25, பீட்ரூட் 28 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி, நுகர்வோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X