போரை எதிர்கொள்ள தயார்; ஈரானுக்கு சவுதி எச்சரிக்கை

Updated : மே 20, 2019 | Added : மே 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ரியாத்:மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு கசந்துள்ள நிலையில், 'ஈரானுடன் போரை விரும்பவில்லை; ஆனால் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்' என, சவுதி அரேபியா கூறியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான, அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது.ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு, ஏற்கனவே மோசமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில், யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரசு எமிரேட்சின், கடல் பகுதியில், எண்ணெய் கப்பல்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில், சவுதி அரேபியாவின், எண்ணெய் டேங்கர்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலை, ஈரான் நடத்தியதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், யு.ஏ.இ., கடல்பகுதியில், தனது போர்க் கப்பலையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.இதனால், சவுதி அரேபியா - ஈரான் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர், அடேல் அல் - ஜூபயர் கூறியதாவது:ஈரானுடன் போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. போர் ஏற்படுவதை தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில், ஈரானால் போரில் இறங்கினால், அதை சமாளிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X