அர்னால்டு முதுகில் உதைத்த நபர் கைது| Dinamalar

அர்னால்டு முதுகில் உதைத்த நபர் கைது

Added : மே 20, 2019
 அர்னால்டு முதுகில் உதைத்த நபர் கைது

ஜோகன்னஸ்பெர்க்:பிரபல ஹாலிவுட் நடிகர், அர்னால்டு, ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஒரு நபர், வேகமாக பாய்ந்து, அவரது முதுகில் உதைத்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பழம்பெரும் ஹாலிவுட் நடிகர், அர்னால்டு, 71. கமாண்டர், டெர்மினேட்டர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் பதவி வகித்தார்.தென் ஆப்பிரிக்காவின், ஜோகன்னஸ்பெர்க்கில், 'அர்னால்டு கிளாசிக் ஆப்ரிக்கா' என்ற விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் அங்கு சென்ற, அர்னால்டு, போட்டியாளர்கள் சிலரை, 'வீடியோ' எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது, அவரது பின்புறம் இருந்து பாய்ந்த ஒருவர், 'பல்டி' அடித்து, அர்னால்டின் முதுகில், ஓங்கி மிதித்தார். இதனால், சில நொடிகள் தடுமாறிய அர்னால்டு, பின், சுதாரித்து, நின்றார். இதற்குள், அவரை உதைத்த நபர், கீழே விழுந்தான். அவனை, பாதுகாவலர்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அவன் யார், அர்னால்டை எதற்காக தாக்கினான் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X