பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியர் முதுமலையில் அதிகரிப்பு

Added : மே 20, 2019
Advertisement
 சுற்றுலா பயணியர் முதுமலையில் அதிகரிப்பு

கூடலுார்:முதுமலையில், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ள நிலையில், மழையால், யானை சவாரி ரத்து செய்யப்படுவதால், ஏமாற்றம் அடைகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. வாகன சவாரி, யானை சவாரி மூலம், வனத்துக்குள் செல்வது; தெப்பக்காடு முகாமில், வளர்ப்பு யானைகளை பார்வையிடுவது ஆகியவற்றால், சுற்றுலா பயணியர் கவரப்படுகின்றனர்.நேற்று முன்தினம், மாலை காற்றுடன் பெய்த மழையால், யானை சவாரி ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக, சுற்றுலா பயணியர் அமர்ந்து செல்ல யானைகள் மீது கட்டப்படும் அம்பாரிகள் நனைந்து ஈரமாகி விட்டன.அவை காயாமல் இருப்பதால், நேற்றும், யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் யானை சவாரியை எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணியர், நேற்றும் ஏமாற்றம் அடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மழையில் நனைந்த அம்பாரியை, யானை மீது கட்ட முடியாது என்பதால், அதை காய வைக்கும் பணி நடக்கிறது. இதனால், நேற்று ஒரு நாள் மட்டும் யானை சவாரி நிறுத்தப்பட்டது. இன்று வழக்கம் போல் யானை சவாரி இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X