பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடம் இருக்கு; நூலகம் இல்லை; அறிவுத்தேடலுக்கு திணறும் மாணவர்கள்

Added : மே 20, 2019
Advertisement

பொள்ளாச்சி : பொதுஅறிவை வளர்க்கும் நுாலக கட்டட வசதி இருந்தும், பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் நுாலக பயன்பாட்டுக்காக பொள்ளாச்சிக்கு பயணிக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

பொள்ளாச்சியில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் அறிவுத்தேடலுக்கு வழிகாட்டியாக நுாலகங்கள் அமைந்துள்ளன. நுாலகத்துறை மூலமாகவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திலும் நுாலகங்கள் அமைக்கப்பட்டன.ஆனால், அந்த நுாலகங்கள் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலான கிராமங்களில், நுாலகம் பெயரளவுக்கு மட்டும் செயல்படுகிறது. பல இடங்களில், நுாலகங்கள் எந்த நேரமும் பூட்டியே கிடப்பதால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.அதில், வக்கம்பாளையம் பகுதியில், நுாலகத்துக்கு என கட்டட வசதி இருந்தும் அதன் பயன்பாடு இல்லாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.பொள்ளாச்சி அருகே வக்கம்பாளையம் கிராமத்தில், நுாலகத்துக்காக அரசு கட்டடம் உள்ளது. நுாலகம் பயன்பாடு இல்லாததால், புத்தகங்களும் இல்லாத கட்டடம் மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அறிவுத்திறமையை மேம்படுத்திக்கொள்ள குழந்தைகள் அமர்ந்து படிக்க வேண்டிய இடம் தற்போது, மாட்டுத்தீவன குடோனாக மாறியுள்ளது. இரவு நேரங்களில், அந்த இடம் சமூக விரோத கும்பல்கள் கும்மாளம் அடிக்கும் இடமாக மாறுகிறது. மதுபானங்களை குடித்து பாட்டில்களை, 'குடிமகன்' வீசிச் செல்கின்றனர்.நுாலக கட்டடத்தின் நிலை கண்டு, புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால், நுாலக பயன்பாட்டுக்காக மாணவர்கள் பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.நுாலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிராமங்கள்தோறும்பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராமங்களில், நுாலக பயன்பாடு பெயரளவுக்கு மட்டும் உள்ளது. பல கிராமங்களில், நுாலகங்கள் எந்த நேரமும் பூட்டியே கிடக்கிறது.இன்னும், பல கிராமங்களில், நுாலகம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியும்.கிராமங்கள் தோறும்பொள்ளாச்சி பகுதியில் உள்ள கிராமங்களில், நுாலக பயன்பாடு பெயரளவுக்கு மட்டும் உள்ளது. பல கிராமங்களில், நுாலகங்கள் எந்த நேரமும் பூட்டியே கிடக்கிறது.இன்னும், பல கிராமங்களில், நுாலகம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X