பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3.59 லட்சம் கையாடல் புகார்

Added : மே 20, 2019
Advertisement

ஓசூர்:கையாடல் புகார் தொடர்பாக, சந்திரசூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேர்ப்பேட்டை, சந்திரசூடேஸ்வரர் கோவில் செயல் அலுவலராக இருந்தவர் ராஜரத்தினம், ௪௭; கடந்த, 2016ல், ஓசூர் அருகே, சென்னத்துார் வேணுகோபால சுவாமி கோவில் பொறுப்பை கூடுதலாக கவனித்தார்.அப்போது கோவிலுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக, 3.59 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இதை, கையாடல் செய்ததாக, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், தர்மபுரி உதவி ஆணையர் நித்யா, வேணுகோபால சுவாமி கோவில் தற்போதைய செயல் அலுவலர் ரகுவர ராஜ்குமார், ஓசூர் போலீசில் புகாரளித்தனர்.நடவடிக்கை எடுக்காததால், சேலம், அல்லிக்குட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு, ராஜரத்தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X