சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு மூவரிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : மே 20, 2019
Advertisement

கோவை:பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, கோவையில், மூன்று பேரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைசி.பி.சி.ஐ.டி., விசாரணையில் இருந்த இந்த வழக்கு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சி.பி.ஐ., அதிகாரிகள், கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள், 'வீடியோ'க்கள் எடுக்கப்பட்ட பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.அந்த வீடுகளின் அருகே, வசிப்பவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இரு பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.இந்த வழக்கில், சிறையில் இருக்கும் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., அதிகாரிகள், சட்டரீதியிலான ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை மாவட்டத்தை சேர்ந்த மூன்று வாலிபர்களிடம் விசாரிக்க, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.முக்கிய தகவல்அவர்களை, கோவை, ரேஸ்கோசில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகம் ஒன்றுக்கு வரவழைத்து, இரண்டு நாட்கள், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பாலியல் வழக்கில், மேலும் சிலர் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X