பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்; தமிழ்ச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : மே 20, 2019
Advertisement

அன்னுார் : அன்னுார் தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய சொற்பொழிவு நடந்தது.அன்னுார், சுப்பையா நகரில் உள்ள தமிழ்ச்சங்கம் சார்பில் ஒவ்வொரு மாதமும், மூன்றாம் ஞாயிறன்று, இலக்கிய சொற்பொழிவு நடக்கிறது. இம்மாத நிகழ்வு நேற்று நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். பொன்னுச்சாமி வரவேற்றார். திருவாசகம் வாசிக்கப்பட்டது.புலவர் ராமதாஸ், 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்னும் தலைப்பில் பேசுகையில்,''அனைத்தும் நன்கு சென்று கொண்டிருந்தால் மகிழ்ச்சி. ஆனால் வாழ்வில் இன்பம், துன்பம் கலந்து வரும். அப்போது அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். இல்லறம், துறவறம் இவற்றில், எது சிறந்தது என அருளாளர்கள் கூறுகையில், ''இல்லற கடமைகளை செய்தபடி, அறவாழ்வு வாழ்வதே சிறந்தது என கூறியுள்ளனர். எதுவும் தெரியாது என்பது ஞானம். எல்லாம் தெரியும் என்பது ஆணவம்,'' என்றார்.சங்க செயலாளர் அன்னாசிகுட்டி நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X