பொது செய்தி

தமிழ்நாடு

இடைத் தேர்தல்: அரவக்குறிச்சியில் ஓட்டுப்பதிவு அமோகம்

Added : மே 20, 2019
Advertisement
 இடைத் தேர்தல்: அரவக்குறிச்சியில் ஓட்டுப்பதிவு அமோகம்

சென்னை:நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், அரவக்குறிச்சியில், அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
சூலுார், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.இத்தேர்தலில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், 84.28 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கோவை மாவட்டம், சூலுார் தொகுதியில், 79.41 சதவீதம் ஓட்டுகளும், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில், 74.17 சதவீத ஓட்டுக்களும் பதிவாகி உள்ளன.குறைந்தபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியில், 72.61 சதவீத ஒட்டுக்கள் பதிவானது.இது மட்டுமின்றி, தர்மபுரி, கடலுார், திருவள்ளூர், ஈரோடு, தேனி லோக்சபா தொகுதிகளில், 13 இடங்களில், மறு ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு மொத்தமாக, 84.13 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.92 சதவீதம்தர்மபுரி, லோக்சபா தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, எட்டு ஓட்டுச் சாவடிகளில், நேற்று, மறு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், மொத்தம், 6,059 வாக்காளர்கள் உள்ளனர். இந்த எட்டு சாவடிகளில் 89.67 சதவீத ஓட்டுகள் பதிவாகின.66.5 சதவீதம் பண்ருட்டி, திருவதிகையில், நேற்று நடந்த மறு ஓட்டுப்பதிவில், 66.5 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இது, 18ம் தேதி பதிவானதில், 16.49 சதவீதம் குறைவாகும். லோக்சபா மற்றும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், வரும், 23ல் அறிவிக்கப்பட உள்ளன.ஓட்டுப்பதிவு குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த பேட்டி:இடைத்தேர்தலில், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்கள் ஓட்டளிக்க, போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன.அதிகளவில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைதியான முறையில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன.இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மீண்டும், அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், சவாலான விஷயங்கள் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் தாண்டி, அமைதியான முறையில், தேர்தலை நடத்தி உள்ளோம்.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து, இதுவரை எந்த தகவலும் வரவில்லை. டில்லியில் இருந்து உத்தரவு வந்தால், தேர்தல் நடத்த, நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மணக்கோலம்
சூலுார் இடைத்தேர்தலில், வளைகாப்பு நிகழ்வு முடிந்த கர்ப்பிணி ஒருவரும், திருமண வரவேற்பு முடிந்த கையோடு புதுமண தம்பதியும், கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி ஓட்டுச் சாவடியில் நேற்று ஓட்டுப் போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X