பொது செய்தி

தமிழ்நாடு

காரமடையில் நரசிம்ம ஜெயந்தி விழா

Added : மே 20, 2019
Advertisement

காரமடை: காரமடை ரங்கநாதர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.காரமடை ரங்கநாதர் கோவிலில் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூல ஸ்தானத்திலிருந்து ஸ்ரீ நரசிம்மர் விக்ரஹம் உற்சவர் சன்னதிக்கு எழுந்தருளுவிக்கப்பட்டது. திருமஞ்சனம் செய்வித்து ,பட்டாடை அணிவிக்கப்பட்டு, பாசுரங்கள் சேவித்து, சாற்றுமறையோடு நிறைவடைந்தது. பானகம் நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை ரங்கநாதர் கோவிலில் நடந்த ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ நரசிம்மர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X