அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மோடியை வீட்டுக்கு அனுப்ப ஒன்று சேர்வோம்'

Added : மே 20, 2019
Advertisement

தேனி:''பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வோம்,'' என, தேனி லோக்சபா, காங்., வேட்பாளர், இளங்கோவன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டசபை தொகுதி வடுகபட்டியில், மறு ஓட்டுப்பதிவு நடந்த ஓட்டுச்சாவடியை பார்வையிட்ட அவர் கூறியதாவது:மாவட்டத்தில் இரு ஓட்டுச்சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு தேவை என, மாவட்ட தேர்தல் அலுவலர் உட்பட யாருமே கேட்கவில்லை. எத்தனை முறை மறுஓட்டுப்பதிவு நடத்தினாலும், அ.தி.மு.க., வெற்றி பெறாது. தேர்தல் ஆணைய நடவடிக்கை மர்மமாக உள்ளது.இரண்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவுக்கு, 100 ஓட்டு இயந்திரங்கள் எதற்காக வந்துள்ளது என தெரியவில்லை. தேர்தல் முடிவுக்கு பின், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராகவும், மத்தியில் ராகுல் பிரதமராகவும் பொறுப்பேற்பர்.மோடிக்கு எதிராக எல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதற்காக, காங்., மட்டுமல்ல, மம்தா, சந்திரபாபு, மாயாவதி உட்பட அனைவரும் ஒன்றாக சேர்வோம்.மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் தேச பக்தர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து கொள்வதில் தவறு இல்லை. இப்போதே தேர்தல் முடிவை உணர்ந்து, மோடி, இமயமலைக்கு, தியானம் செய்ய சென்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X