தங்க தமிழ்ச்செல்வன் உறுதி
தேனி:''தி.மு.க., ஆட்சி அமைக்க ஆதரவு தரமாட்டோம்,'' என, தேனி லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளரும் அக்கட்சி கொள்கை பரப்பு செயலருமான, தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி வடுக பட்டியில், நடந்த மறு ஓட்டுப்பதிவை பார்வையிட்ட அவர் கூறியதாவது:ராகுல் தான் அடுத்த பிரதமர் என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்தார்; கூட்டணி கட்சி கள் மற்றும் சோனியா அறிவிக்கவில்லை. இரட்டை வேடம்ஆனால், தேர்தல் முடிவதற்குள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை அவர் சந்தித்தது தவறு. அவர் இரட்டை வேடம் போடுகிறார்.நாங்கள் ஜெயித்தபின் துரோக, அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க ஓட்டளிப்போம். நாங்கள் யாருக்கும் துணை போக மாட்டோம். தி.மு.க., ஆதரவு தெரிவித்தாலும், எதிர்த்தாலும் மகிழ்ச்சி. அ.தி.மு.க., ஆட்சியை கலைப்பது தான் எங்கள் நோக்கம். மக்கள் அதற்கு தான் ஓட்டளித்துள்ளனர்.அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணத்தை பாதாளம் வரை பாய்ச்சுகிறது. தேனி தொகுதியில், 12 லட்சம் ஓட்டுக்கு, 1,000, 2,000 ரூபாய் வீதம், 300 கோடி ரூபாய் செலவு செய்துஉள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சாதாரண தொண்டர்களை, எம்.எல்.ஏ., ஆக்கினார்.துணை முதல்வர் பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., ஆவதற்கு முன் சாதாரணமானவராக இருந்தார். வியப்புஇன்று மகனுக்கு, 300 கோடி ரூபாய் செலவு செய்வது வியப்பாக இருக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, 'தினமலர்' இதழும் நன்றாக எழுதியது. ஆனால், பண வினியோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE