சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர் டி.ஐ.ஜி.,யுடன் மோதல்

Added : மே 20, 2019
Advertisement

கரூர்:தி.மு.க., வேட்பாளர், பெண் டி.ஐ.ஜி., இடையே, வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு, நேற்று தேர்தல் நடந்தது. தளவாப்பாளையம் பள்ளி ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 மீட்டரில், தி.மு.க.,வினர் கொட்டகை போட்டிருந்தனர். அதை அகற்றுமாறு, திருச்சி சரக, டி.ஐ.ஜி., லலிதா லட்சுமி உத்தரவிட்டார்.இதையறிந்த தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி சென்றார். “அ.தி.மு.க.,வினர் போட்ட கொட்டகையை அகற்றாமல், தி.மு.க.,வினர் கொட்டகையை அகற்ற ஏன் உத்தரவிட்டீர்கள்?,” என, கேள்வி கேட்டு, வாக்குவாதம் செய்தார்.''தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு முரணாக யார் செயல்பட்டாலும், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இதை தொடர்ந்து, இரு கட்சியினரின் கொட்டகையும் அகற்றப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X