சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் குடும்பமே தற்கொலை முயற்சி

Added : மே 20, 2019
Advertisement
 ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால்  குடும்பமே தற்கொலை முயற்சி

திட்டக்குடி:திட்டக்குடி அருகே, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர், தற்கொலை செய்வதற்காக, டி.எஸ்.பி., அலு வலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து, 60. ஊர் முக்கியஸ்தர்கள், சில ஆண்டுகளுக்கு முன், கிராம மக்களிடம் பணம் வசூலித்து, கோவில் திருவிழா நடத்தினர். இது குறித்த கணக்கு வழக்குகளை மருதமுத்து கேட்டதால், பிரச்னை ஏற்பட்டது. இதனால், மருதமுத்து குடும்பத்தை பொது விழாக்களில் சேர்க்காமல் தள்ளி வைத்ததாக தெரிகிறது. தற்போது திருவிழா நடத்த பொதுக்கூட்டம் நடந்தபோது, தங்களை ஒதுக்கிவைத்தது குறித்து மருதமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருதமுத்து குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், மருதமுத்து, அவரது மகன் செல்வேந்திரன், தாய், சகோதரி மற்றும் குழந்தை கள் உள்ளிட்ட, ஆறு பேர், நேற்று காலை, தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன், மண்ணெண்ணெய் கேனுடன், டி.எஸ்.பி., அலுவலகம் வந்தனர்.இதையறிந்த போலீசார், மருதமுத்துவிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். திட்டக்குடி, டி.எஸ்.பி., குணசேகரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X