பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு

Added : மே 20, 2019
Advertisement

பிரதமர் மோடிக்கு நன்றி அறிவிப்பு விழா

திருச்சி:கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு அறிவித்த, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தென் மண்டல பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் நடந்தது.
விழாவில், 'தாம்பிராஸ்' நிறுவனர், சின்னை வெங்கட்ராமன் பேசியதாவது:சமூகத்தில், சமத்துவம் ஏற்படுத்த கீழே உள்ளவர்களை, முன்னேற்ற வேண்டுமே தவிர, மேலே உள்ளவர்களை கீழே தள்ளக்கூடாது. இந்த தவறை, இது நாள் வரை செய்து வந்த, மத்திய - மாநில அரசுகளின் நிலைப்பாட்டில், பல உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் சிரமங்களை சந்தித்தனர்.இந்நிலையில், பிரதமர் மோடி, யாருக்கும் பாதிப்பில்லாமல் பொதுப்பிரிவிலிருந்து உயர்வகுப்பினருக்கும் கல்வி வேலை வாய்ப்பில், 10 சதவீதம் ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் பேசியவர்கள் கூறியதாவது:பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மீனா: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்து வேற்றுமைகளை களைந்து, உழைத்தால் நாடு வெற்றி பெற முடியும். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக துணைத் தலைவர், குணசீலன்: மக்களுக்கு என்ன தேவையோ, அதை அமைதியாக செய்து முடித்ததோடு, அதைச் சொல்லிக்காட்டி சுயநலம் தேடாத, பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர்.
சவுராஷ்டிரா சபா நிர்வாகி சங்கர்: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, சம்பந்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
திருச்சி சவுராஷ்டிரா சபை தலைவர் ஜனார்த்தனன்: இந்த இடஒதுக்கீட்டுக்காக தமிழகம் மட்டுமில்லாமல், 23ம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.பா.ஜ., வர்த்தக பிரிவு மாநில துணை தலைவர் ஜெயச்சந்திரன்: நம் நாட்டில் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சிறுபான்மையினர் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனரே தவிர, முற்பட்ட சமூகத்தவருக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், பிரதமர் மோடி நடுநிலையாக சிந்தித்து, பாரபட்சமின்றி பொதுப்பிரிவில் முற்பட்ட சமூகத்தினருக்கென, 10 சதவீத இடஒதுக்கீடு அறிவித்தது பாராட்டத்தக்கது.
ராஷ்டிரிய ஜனாதன சேவா சங்க நிறுவனர் ராமநாதன்: இப்போது மட்டுமில்லை, வரும், 23ம் தேதிக்குப் பிறகும் மோடி தான் பிரதமர்.
அகில இந்திய தெலுங்கு சம்மேளன தென் மாவட்டங்களின் செயலர் பிரசன்ன வெங்கடேசன்: பிராமணர்கள் மட்டுமின்றி, 79 சமுதாயத்தினர் பயனடையும், இந்த இடஒதுக்கீடு, யாரும் நினைத்து பார்க்காத ஒன்று. யாரும் எதிர்பார்க்காத, ஆனால், தேவையான ஒரு உதவியை செய்த மோடிக்கு, ஒவ்வொரு சமுதாயத்தினரும் நன்றி தெரிவிக்க வேண்டும்.எழுத்தாளர் புதுக் கோட்டை ஆரோக்கியசாமி: சமுதாயத்தில் அனைத்து பிரிவுகளிலும் உள்ள ஏழைகளுக்கும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால் தான், ஜாதிகள் அற்ற சமுதாயம் உருவாகும். எதிர்க்கட்சிகள் எதிர்க்க முடியாத போதே, இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு எவ்வளவு நியாயமானது என, தெரிய வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X