அடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை

Added : மே 20, 2019
Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆண்டிபட்டி வாரச்சந்தை திங்கட்கிழமை கூடுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்டத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முதல் நாள் மாலையில் கூடி விடுவர். வியாபாரத்திற்காக இரு நாட்கள் தங்கும்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆண்டிபட்டி வாரச்சந்தை திங்கட்கிழமை கூடுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்டத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முதல் நாள் மாலையில் கூடி விடுவர். வியாபாரத்திற்காக இரு நாட்கள் தங்கும் வியாபாரிகளுக்கு சந்தை வளாகத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பொதுக்ககழிப்பறை, குளியல் அறை இல்லாததால் நகர் பகுதிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு வரும் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவர்.மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணி வரையும் வியாபாரம் நடக்கிறது. இரவில் மின் விளக்கு வசதி சந்தை வளாகத்தில் இல்லை.

இதனால் பலரும் அச்ச உணர்வுடன் பணம், பொருட்களை பாதுகாக்கும் நிலை உள்ளது. சந்தை வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை, குளியல் அறை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. சந்தை இல்லாத நாட்களில் மீன்கடைகள், கறிக்கோழிக்கடைகளின் கழிவுகளை வளாகத்தில் கொட்டி செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு கடைகளுக்கான மேடை, மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மழை, வெயில் காலங்களில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X