ஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு

Added : மே 20, 2019
 ஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவர் ஒருவர், ஐரோப்பாவில் நடைபெறும், உலக மாற்று திறனாளிகளுக்கான, வீல்சேர்சதுரங்க போட்டியில்பங்கேற்க, நிதி வசதியின்றி தவித்து வருகிறார்.
புதுக்கோட்டையை சேர்ந்த, அடைக்கலவன் என்பவரது மகன் அங்கப்பன், 22. பிறவியிலிருந்தே இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயல்படாத தால், வீல் சேர் உதவி யுடன் செயல்பட்டு வந்தார். மிகுந்த சவாலுக்கிடையே, திருச்சியில் உள்ள இன்ஸ்டிடியூட்டில், சி.ஏ., படித்து வருகிறார்.தந்தை உதவியுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வரும் அங்கப்பன், எட்டு ஆண்டுகளாக, பயிற்சியாளர் முகமதுஅலி ஜின்னா என்பவரிடம்,சதுரங்கத்தில் பயிற்சி பெற்று, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சாதனை புரிந்து வருகிறார்.ஜூன், -26ல், ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவாக்கியாவில் நடைபெறும், உலக அளவிலான மாற்று திறனாளிகள் சதுரங்க போட்டி வீல்சேர் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.இந்தியாவிலிருந்து, ஐந்து பேர் பங்கேற்கும் போட்டியில், திருச்சியை சேர்ந்த, ஜெனிதா, புதுக்கோட்டையை சேர்ந்த, அங்கப்பன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். திருச்சியை சேர்ந்த ஜெனிதா முதலிடம் பெற்று தேர்வானதால், அவரை மட்டும் அரசு சார்பில் அழைத்துச் செல்ல உள்ளனர்.ஆண்களுக்கான வீல்சேர் பிரிவில், மூன்றாம் இடம் பிடித்து, தகுதி பெற்றுள்ள அங்கப்பன், சொந்த செலவில் சென்று வரவேண்டி உள்ளது. இதனால், போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றும் நிதி வசதி இல்லாமல் அங்கப்பன் தவித்து வருகிறார்.
இது குறித்து, அங்கப்பன் கூறியதாவது:-ஏற்கனவே, பலமுறை மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தும், பொருளாதார வசதிஇல்லாததால், பங்கேற்க முடியவில்லை. தற்போது, இந்தியாவுக்காக, விளையாட வாய்ப்பு கிடைத்து உள்ளது.இதில், வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். ஆனால், ஐரோப்பாவுக்கு செல்ல அதிக செலவாகும். அரசு உதவினால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அங்கப்பன் தொடர்புக்கு: 8608036535.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X