சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, விபத்து

Added : மே 20, 2019
Advertisement

ஓட்டளித்து சென்றவர் பலி
பாஞ்சாலங்குறிச்சி, சிலோன் காலனியைச் சேர்ந்தவர், மாடசாமி, 60. இவர் நேற்று பகல், 12:00 மணிக்கு, ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில், சிலோன் காலனி ஓட்டுச்சாவடி யில் ஓட்டு போட்டு திரும்பி னார். ஓட்டுச்சாவடியிலிருந்து, 100 மீட்டர் தள்ளி சென்றவர், திடீரென சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
ஏரியில் தவறி விழுந்துசிறுவன் சாவு
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், ஆய்க்குடி கிராமத்தைச் சேர்ந்த, தனுஷ், 14, அங்குள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை, வீட்டுக்கு அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளான்.ஏரியில் இறங்கிய போது, தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கினான். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் உடலை, வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டனர்.இது குறித்த புகார்படி, மங்கலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி படுகொலை'சந்தேக' கணவன் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், வெப்பாளம்பட்டியைச் சேர்ந்தவன், கோவிந்தன், 34; கட்டட மேஸ்திரி. இவன் மனைவி கஸ்துாரி, 27. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கஸ்துாரி நடத்தையில், கோவிந்தனுக்கு சந்தேகம் இருந்தது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோவிந்தன், கத்தியால் கஸ்துாரி கழுத்தை அறுத்து, கொலை செய்தான். தப்பி ஓடிய கோவிந்தன், வெப்பாளம்பட்டி, வி.ஏ.ஓ., விடம் சரணடைந்தான். அவனை, பர்கூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X