பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., இறந்ததாக வதந்தி பரப்பியவர் மீது வழக்கு பதிவு

Added : மே 20, 2019
Advertisement

வானுார்:வானுார், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்கரபாணி மாரடைப்பால் இறந்ததாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி பரப்பியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சக்கரபாணி. இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக, குரல் பதிவு மூலம், வாட்ஸ் ஆப்பில் நேற்று முன்தினம், ஒருவர் அவதுாறு செய்தி பதிவிட்டிருந்தார்.அதில் பேசிய நபர், 'வானுார் தொகுதி சட்ட சபை உறுப்பினர் சக்கரபாணி, அரை மணி நேரத்துக்கு முன், மாரடைப்பால் உயிரிழந்தார்' என,பதிவிட்டிருந்தார்.சமூக வலைதளங்களில் பரவிய இந்த அவதுாறு செய்தியால், பரபரப்பு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ., குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.இது குறித்து, எம்.எல்.ஏ., சக்கரபாணியின் மகன், கதிரவன், 40, கிளியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி கிளியனுார் போலீசார், அவதுாறு செய்தி பரப்பிய நபர் மீது, வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X