பொது செய்தி

தமிழ்நாடு

'கழிப்பறை கட்டி ஓராண்டாச்சு... மானியம் தான் வரல'

Added : மே 20, 2019
Advertisement

கம்பம் : தனிநபர் கழிப்பறை கட்டி ஓராண்டாகியும் இதுவரை அதற்கான மானியத்தை தராமல் கம்பம் நகராட்சி இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ்கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்ட மானியம் வழங்கப்பட்டது.

கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ரூ. 12ஆயிரம் நகராட்சிகளில் ரூ. 8 ஆயிரம் தரப்பட்டது. கம்பம் நகராட்சியில் கழிப்பறை கட்டியும், உரிய மானியம் கிடைக்கவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயனாளிகள் கூறுகையில், துாய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டி ஓராண்டாகி விட்டது. அதற்குரிய மானியம் கிடைக்கவில்லை. தினமும் நகராட்சிக்கு சென்று வருகிறோம். உரிய பதில் கிடைக்கவில்லை, என்றனர் நகராட்சி கமிஷனர் (பொ) செல்வராணி கூறுகையில், கழிப்பறை முறைப்படி கட்டி உரிய புகைப்படம் எடுத்து கம்ப்யூட்டரில் அப்லோடு செய்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று பேருக்கு வழங்கி வருகிறேன். இதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X