விபத்தில் சிக்கிய சிறுமி மூளைச்சாவு உறுப்பு தானத்தால் 5 பேருக்கு, உயிர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய சிறுமி மூளைச்சாவு உறுப்பு தானத்தால் 5 பேருக்கு, 'உயிர்'

Added : மே 20, 2019

ஆத்துார்:விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடலுறுப்புகள், ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.
சென்னை, முகப்பேர், மோகன்ராம் நகரைசேர்ந்தவர், பார்த்திபன், 49; துபாய் பெட்ரோலிய நிறுவன மேலாளர். மனைவி கவிதா, 42, மகள்கள் தர்ஷினி, 19, தீட்ஷா, 14, ஆகியோருடன், சொந்த ஊரான, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடிக்கு, 'ஸ்விப்ட் டிசையர்' காரில், கடந்த, 11ல், ஆத்துார் புறவழிச்சாலை வழியாக வந்தார்.வசிஷ்ட நதி மேம்பால நடைபாதை தடுப்புச்சுவரில், கார் மோதி தீப்பிடித்தது. இதில் பார்த்திபன் உயிரிழந்தார். காயமடைந்த தர்ஷினி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் இறந்தார்.மனைவி கவிதா, மற்றொரு மகள் தீட்ஷா, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்கு, சேலம் தனியார் மருத்துவமனையில், தீட்ஷா சேர்க்கப்பட்டார்.கடந்த, 16ல், தீட்ஷா, மூளைச்சாவு அடைந்தார். அவரது தாய் ஒப்புதலுடன், இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல்தானமாக வழங்கப்பட்டன. சேலம், ஈரோடு, கோவை, சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X