பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகள்

Added : மே 20, 2019
Advertisement


கங்கையம்மனுக்கு நாளை ஜாத்திரை

திருத்தணி: திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில், கங்கையம்மன் ஜாத்திரை, நாளை, நடக்கிறது.விழாவையொட்டி, நாளை, காலை, 8:00 மணிக்கு, தேசம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.அதை தொடர்ந்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.இரவு, 7:00 மணிக்கு, பூ கரகத்துடன், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிராமம் முழுவதும் வீதியுலா வருகிறது. அதை தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சி, நாடகம் நடைபெறுகிறது.


இன்று அர்ச்சுனன் தபசு

திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல் திருத்தணி மற்றும் குடிகுண்டா ஆகிய இடங்களில் உள்ள தர்மராஜா கோவில்களில் தீமிதி விழா, 9ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வருகிறது.இன்று, காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் அர்ஜூனன் தபசு நடக்கிறது. 26ம் தேதி காலையில், துரியோதனன் படுகளம், மாலையில், தீமிதி விழா நடைபெறுகிறது.


திருவாலங்காட்டில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு: திருவாலங்காட்டில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, அக்னி குண்டத்தில், 2,000 பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X