அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் விறுவிறு ஓட்டுப்பதிவு

Added : மே 20, 2019
Advertisement

வெளியேற மறுத்த அ.தி.மு.க.,: முற்றுகையிட்ட தி.மு.க.,
திருப்பரங்குன்றம்:மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
அ.தி.மு.க., சார்பில் முனியாண்டி, தி.மு.க., சார்பில் சரவணன், அ.ம.மு.க., சார்பில் மகேந்திரன், ம.நீ.ம., சார்பில் சக்திவேல், நாம் தமிழர் சார்பில் ரேவதி உட்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.மொத்த ஓட்டுக்கள் 3 லட்சத்து 4,478. காலை 9:00 மணிக்கு 12.25 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. சில இடங்களில் இயந்திரங்கள் பழுதால் ஓட்டுப்பதிவு தாமதமாகியது. தனக்கன்குளம் ஓட்டுச்சாவடியில் மாதிரி ஓட்டுப்பதிவை அழிக்காமல் ஓட்டுப்பதிவு துவங்கியதால் சிறிது நேரம் ஓட்டுப் பதிவு நிறுத்தப்பட்டது. ஓட்டுச்சாவடிக்கு அருகே அ.தி.மு.க.,வினர் ஓட்டுக் கேட்பதாக தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமாதானப்படுத்தினர்.பிடிவாதம்பெருங்குடி ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட எல்லையை தாண்டி அ.தி.மு.க., தி.மு.க., ஏஜன்ட் எனக் கூறி ஏராளமானவர்கள் சேர்களில் உட்கார்ந்து கொண்டு வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தனர். அவர்களை போலீசார் வெளியேற உத்தரவிட்டனர். அ.தி.மு.க.,வினர் வெளியேறவில்லை.'இங்கு 7,000 ஓட்டுக்களில் 4,000 பேருக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. அவர்கள் ஓட்டுச்சாவடி செல்ல உதவுகிறோம். 400 மீட்டர் தள்ளி இருப்பதால் கடந்து செல்லும் வாக்காளர்களிடம் ஓட்டுக் கேட்கிறோம்' என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். கடைசி வரை அவர்களை வெளியேற்ற போலீசால் முடியவில்லை.தி.மு.க., எம்.எல்.ஏ., முற்றுகைஅயன்பாப்பாகுடி ஓட்டுச்சாவடியில் சுயே., வேட்பாளர் சந்திரஹாசனின் ஏஜன்ட்கள் கார்த்திக், பாலாஜி. இவர்களது அடையாள அட்டையில் அதிகாரி 'சீல்' இல்லை. அவர்களை வெளியேற போலீஸ் உதவி கமிஷனர் அலெக்சாண்டர் உத்தரவிட்டார். அவர்கள் மறுத்ததால் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றார். இதையறிந்து தி.மு.க., எம்.எல்.ஏ., தியாகராஜன், நகர் பொறுப்பாளர் தளபதி மற்றும் நிர்வாகிகள் ஸ்டேஷனில் முற்றுகையிட்டனர். 2 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர். சந்திரஹாசன் தி.மு.க., ஆதரவுடன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஏஜன்ட்டாக தி.மு.க., வினர் நியமிக்கப்பட்டது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X