சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடி மோசடி: பெண் கைது

Added : மே 20, 2019
Advertisement

சேலம்:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த சேலம் தனியார் நிறுவன பெண் உரிமையாளர் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.சேலத்தை சேர்ந்தவர் உமாராணி 45; இவரது உதவியாளர் கார்த்திக் 32; இவர்கள் சேலத்தில் 'ராணா மேன் பவர் கன்சல்டன்சி' எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டனர். தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். 2 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை 50க்கும் மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை வசூலித்தனர்.கடந்த 12 முதல் உமாராணியின் அலைபேசி அணைக்கப்பட்டு சமூக வலைதள கணக்கு முடக்கப்பட்டது. இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் வந்து பார்த்தபோது அலுவலகம் வீடு பூட்டப்பட்டிருந்தது.நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த துளசிராமன் 28 தலைமையில் 20 பேர் அளித்த புகாரின்படி சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். உமாராணி கார்த்திக்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் மூவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X