பொது செய்தி

தமிழ்நாடு

உலகத்தை இயக்கும் 'டேட்டா'

Added : மே 20, 2019
Advertisement

சென்னை:சென்னை தி.நகரில் நடந்த நாரதர் ஜெயந்தி விழாவில் ''வருங்காலங்களில் 'டேட்டா' தான் உலகத்தை இயக்கும்'' என 'ரிலையன்ஸ் ஜியோ' ஊடக இயக்குனர் உமேஷ் உபாத்யாய் பேசினார்.'விஸ்வ சம்வாத் கேந்திரம்' என்ற அமைப்பு சார்பில்'நாரதர் ஜெயந்தி' மற்றும் விருது வழங்கும் விழா தி.நகரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற'ரிலையன்ஸ் ஜியோ' ஊடக இயக்குனர் உமேஷ் உபாத்யாய் பேசியதாவது:'ஜியோ' வருவதற்கு முன் இந்தியர்கள் 50 கோடி ஜி.பி. 'டேட்டா'வை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தினர். தற்போது ஒரு மாதத்திற்கு 300 கோடி ஜி.பி. டேட்டாவாக உயர்ந்து உள்ளது.உலகிலேயே டேட்டா பயன்பாட்டில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 60 கோடி 'இன்டர்நெட்' இணைப்புகள் உள்ளன.இந்தியர்கள் வாரத்தில் 17 மணி நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுகின்றனர். 2018ம் ஆண்டு 'டிஜிட்டல் மீடியா'வின் வருமானம் 11 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 9.5 ஆயிரம் கோடி ரூபாய் 'கூகுள் பேஸ்புக்' ஆகியவற்றிக்கு கிடைத்துள்ளன.வெறும் 1.5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இந்திய நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளன. வருங்காலங்களில் 'டேட்டா' தான் உலகத்தை இயக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X