கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் கட்சிகள் தீவிர கவனம்

Added : மே 20, 2019
Advertisement

பெங்களூரு:கர்நாடகத்தின் 63 உள்ளாட்சிகளுக்கு நடக்கும் தேர்தல் மீது, அரசியல் கட்சி தலைவர்களின் கவனம் திரும்பியுள்ளது.கர்நாடகத்தில் 22 மாவட்டங்களின், எட்டு நகராட்சி, 33 டவுன் சபை, 22 பட்டண பஞ்சாயத்துகள் என, 63 உள்ளாட்சிகளுக்கு, 29ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக 9ம் தேதி துவங்கிய வேட்பு மனு தாக்கல், 16ல் நிறைவடைந்தது. 17ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள். லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பரபரப்பு ஓய்ந்த நிலையில், அனைத்து கட்சி தலைவர்களின் கவனமும், உள்ளாட்சி தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது.பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே பலமான போட்டி நிலவுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்த பிரமுகர்கள், உள்ளாட்சிகளில் எதிரெதிரே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அதிக இடங்களை கைப்பற்றுவதற்கான வியூகங்களை, கட்சித் தலைவர்கள் வகுக்கத் துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X