பா.ஜ., அரசுக்கு ஆதரவு, 'வாபஸ்'; மணிப்பூரில் கூட்டணி கட்சி முடிவு

Added : மே 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இம்பால்: வட கிழக்கு மாநிலமான, மணிப்பூரில், பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, 'வாபஸ்' பெறப் போவதாக, கூட்டணி கட்சியான, நாகா மக்கள் கட்சி அறிவித்துள்ளது.






மணிப்பூரில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 21 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வுக்கு, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற, எட்டு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். நாகா மக்கள் கட்சியை சேர்ந்த நான்கு பேர், லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த ஒருவர், இரண்டு சுயேச்சைகள் ஆதரவுடன், முதல்வர் பீரேந்திர சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவுள்ளதாக, நாகா மக்கள் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சி தலைவர், அவாங்போ நியுமை கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தபோது, எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எங்கள் கோரிக்கை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.





சிறிய கட்சிகளை, பா.ஜ., தலைவர்கள் மதிக்க மறுக்கின்றனர். அதனால், எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, கருத்து கேட்டோம். அதில், பெரும்பாலான தலைவர்கள், 'பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர். இதன்படி, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும், இந்த முடிவை, முறைப்படி அமல்படுத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

'மொத்தம், 60 உறுப்பினர்கள் அடங்கிய மணிப்பூர் சட்டசபையில், பா.ஜ., அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, நாகா மக்கள் கட்சி வாபஸ் பெற்றாலும், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. 'பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை, பா.ஜ., கூட்டணி அரசுக்கு உள்ளது' என, அரசி யல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-201907:40:25 IST Report Abuse
Bhaskaran காவி வெற்றிபெற்றதாக முடிவுகள் வந்தால் எதிர்க்கட்சி உடைக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
20-மே-201904:47:12 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X