தேர்தல் நடத்தை விதிமீறல்: மோடி மீது எதிர்கட்சிகள் புகார்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றது மற்றும் அங்கு செய்தியாளர்களை சந்தித்தது குறித்து, எதிர்க் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.






திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெயின் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி, கேதார்நாத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பேட்டி அளித்தது, அப்பட்டமான விதிமீறல்; இது, சரியான நடைமுறை அல்ல. கடைசி கட்ட ஓட்டுப் பதிவு நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணமும், மீடியாக்களில் நேரடியாக ஒளி பரப்பாயின. இது குறித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.





மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், எம்.பி., பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், ''பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் முழுவதும், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பப் பட்டன; இது, வாக்காளர்களை மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க துாண்டும் செயலா கவே கருத வேண்டும். தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறிய, பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201917:40:06 IST Report Abuse
Thiagu ஒன்னு மட்டும் நிச்சயம். மோடி வருவதற்கு முன்னால் ஹிந்துக்கள் இவர்களுக்கு இளிச்சவாயர்கள். இப்போ சும்மா அதிருதில்ல.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
20-மே-201916:13:48 IST Report Abuse
M.COM.N.K.K. எதிர் கட்சிகளுக்கு இதேவேலையாகிப் போய்விட்டது
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
20-மே-201916:12:38 IST Report Abuse
M.COM.N.K.K. எதிர்கட்சிகளை இதே வேலையாகிப்போய்விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X