இந்திராவை போல் மோடி தோற்க வேண்டும்: மாயாவதி

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (41)
Advertisement

லக்னோ: 1977ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றத்தை போல, வாரணாசியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து மாயாவதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: குஜராத்தின் வளர்ச்சியை போல, உ.பி.,யின் கிழக்கு பகுதியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நீக்கப்படவில்லை. அங்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமல், மக்களை, யோகி ஆதித்யநாத்தும், நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர். கோரக்பூர் பார்லி., தொகுதியில் யோகியை மக்கள் நிராகரித்தனர். மோடியின் வெற்றியைவிட, அவரது தோல்வி வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோறகடிக்கப்பட்டார். அதுபோல் இப்போது வாரணாசி தொகுதியில் மீண்டும் நிகழுமா?

மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில அரசுகள் தூண்டி விடுகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். உ.பி., மாநிலம் ரேபரேலியில், 1977ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ராஜ் நாராயணன் என்பவர், இந்திராவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.






சோனியா, ராகுலுடன் சந்திப்பு?


இந்நிலையில், மாயாவதி, டில்லியில் சோனியா மற்றும் ராகுலை, இன்று(மே 20) சந்திக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், 80 தொகுதிகள் உள்ள, உ.பி.,யில், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து, பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் காங்.,கை சேர்க்கவில்லை. இந்த நிலையில், சோனியா மற்றும் ராகுலை, அவர் சந்திக்க உள்ளது, தேசிய அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மே-201918:06:26 IST Report Abuse
Natarajan Ramanathan
Rate this:
Share this comment
Cancel
21-மே-201903:01:50 IST Report Abuse
கோகுல், மதுரை முத்தலாக் தடை சட்டத்தால் 20 சதவீதம் இஸ்ஸாமிர்கள் உள்ள உபியில் குறைந்தது 8 சதவீதமாவது எதிர்கட்சிகளுக்கு ஆழமான ஆப்பாக இறங்கி இருக்கும். உங்க கட்சி இரட்டை இலக்கத்தை தாண்டுவதே அரிது. இதில் மோடி தோற்க்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் இந்த சொப்பண சுந்தரி.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-மே-201917:18:46 IST Report Abuse
J.V. Iyer பாகிஸ்தான் நீங்கலாக உலகமே மோடிஜி பக்கம். வாரணாஸி வெற்றி இமாலய வெற்றியை கொடுக்கும். இதை கேட்டு மாயாவதிக்கு மாரடைப்பு வராமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X