சர்ச்சையில் லாலு மகன்

Added : மே 20, 2019
Advertisement

பீஹார் முன்னாள் முதல்வரான, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் யாதவ், சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாடலிபுத்ரா தொகுதியில் ஓட்டளிக்க சென்ற போது, அவருடைய பாதுகாவலர்கள், பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர்.இது தொடர்பான வீடியோ வெளியானது.
''ஓட்டளித்து திரும்பிய போது, நிருபர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அப்போது, அங்கிருந்த புகைப்படக்காரர், ரஞ்சன் என்பவர், என்னுடைய கார் கண்ணாடியை உடைத்துள்ளார்; இதில் டிரைவர் காயமடைந்தார். இது, என்னைக் கொல்வதற்கு நடந்துள்ளது சதி,'' என, தேஜ் பிரதாப் கூறினார். கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ள, தம்பி தேஜஸ்வியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தன் ஆதரவாளர்களை, சுயேச்சையாக தேர்தலில் களம் இறக்கியுள்ளார், தேஜ் பிரதாப்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X