தமிழ்நாடு

அவதி ! வறட்சியால் தண்ணீர் இன்றி கால்நடைகள் ... அடிமாடாக அனுப்பும் விவசாயிகள்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
விவசாயிகள், தண்ணீர்ச, கால்நடை, தீவனம், மேய்ச்சல், மதுரை

மதுரை, : மதுரை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் நீர் நிலைகள் வறண்டுள்ளன. தண்ணீரை தேடி கத்தரி வெயிலில் கால்நடைகளை நீண்ட துாரம் அழைத்து செல்லும் நிலையுள்ளது. இதனால் கால்நடைகளை அடிமாடுகளாக அனுப்பும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.மாவட்டத்தில் தெத்துார், செங்குளம், வலையங்குளம், வாடிப்பட்டி, அலங்காநல்லுார், உசிலம்பட்டி மேலுார் பகுதிகளில் கிடை மாடுகள், கிடை ஆடுகள் வளர்க்கும் தொழிலை சிலர் மேற்கொண்டுள்ளனர். குறைந்தபட்சம் 2 லட்சம் கிடை மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
குறைந்தது 400, அதிகபட்சம் 1200 மாடுகளை குழுக்களாக பிரித்து தினமும் காலை 8:00 மணிக்கு மாடு மேய்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர். கோடை வெயில் கடுமையாக இருப்பதால் நீர் நிலைகள் வறண்டுள்ளன. மேய்ச்சல் நிலங்களில் புற்கள் கருகி விட்டன. தீவனம், தண்ணீர் இன்றி கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்குள்ளாகின்றனர். வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை ஆடு மேய்க்கும் தொழிலாளி காட்டுராணி கூறியதாவது: வாடிப்பட்டியில் கிடை மாடு, ஆடு வளர்ப்போர் அதிகம்.

தற்போது வறட்சி நிலவுவதால் தோட்டங்களுக்கு சென்று உரிமையாளரிடம் கெஞ்சி கேட்டு கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுகிறோம். மாடு ஒன்றுக்கு தினமும் 30 லிட்டர், ஆடு ஒன்றுக்கு 10 லிட்டர் வரை தண்ணீர் தேவை. எரிக்கும் வெயிலில் தண்ணீர் இன்றி கால்நடைகள் சோர்ந்து விடுகின்றன.தேவையான தண்ணீர் கொடுத்தால் காப்பாற்ற முடியும். கால்நடைகளை அடிமாடாக சிலர் விற்கின்றனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201905:11:29 IST Report Abuse
ஆப்பு கால்நடைகளும் தாவரங்களும் நமது வாழ்க்கைக்கு ஆதாரம். அவை அழிந்தால் நமது அழிவும் நிச்சயம். அதனால் என்ன? மத்திய, மாநில அரசுகள் ஆளுக்கு 2000 போட்டுரும். கண்மாயில எல்லோருக்கும் 2022 க்குள்ளாற வூடு கட்டிடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
21-மே-201904:16:15 IST Report Abuse
 nicolethomson எல்லாம் இலவசமா பெற்றுக் கொள்ளவேண்டும் அல்லது திருட்டுத்தனமா மரங்களை அழித்து ஆடுமாடுகளை வளர்த்தால் இவங்களுக்கு காசு , அவன் அவன் கஷ்டப்பட்டு பயிர் மரம் வளர்த்தால் இவனுங்க மேயவிட்டு வேடிக்கை பார்ப்பாங்க இவங்களுக்கு பேரு விவசாயியாம்
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
20-மே-201913:59:24 IST Report Abuse
mohan இதெல்லாம் நம் மக்களுக்கு செவிடன் காதில் ஊதும் சங்கு....மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் நாடு திருந்தது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X