பொது செய்தி

இந்தியா

மோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் வாடகை ரூ.990

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (43)
Advertisement

கேதார்நாத்: கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.






லோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.







Advertisement


இக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.





பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ரூ.3,000 என குகைக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வருகை குறைவால் சரியாக முன்பதிவு ஆகாமல் இருந்தது.





குகை திறக்கப்பட்ட நேரம், அதிக குளிர் நிலவும் நேரம். மேலும் முன்பதிவு 3 நாட்களுக்கு முன்னரே செய்ய வேண்டியிருந்தது. எனவே குகைக்கு பயணிகள் அதிகம் வரவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் ஆலோசித்து, குகையின் வசதிகளை மேம்படுத்தி, வாடகையையும், ரூ.990ஆக குறைக்க, நடவடிக்கை எடுத்தார்.








குகையில் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் மூன்று வேளை உணவு, இரண்டு நேரம் டீ, வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனியாக தங்கியிருக்கும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எந்நேரமும் உதவிக்கு அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி, இதில் எவ்வித வசதிகளையும் எடுத்துக் கொள்ளாமல், 17 மணி நேரம் குகையில் தியானம் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
20-மே-201921:10:10 IST Report Abuse
Suri மோடியின் இந்த த்யானம் நமோ டிவியில் பாவம் வெளிவந்தது இல்லையோ?? நமோ டிவி தான் தேர்தல் முடிந்த உடனே மூடியாகிவிட்டதே. இனி அமித் டிவி இல்லை கட்கரி டிவி தான் திறக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
20-மே-201921:03:58 IST Report Abuse
Suri கட்டுரையின் கடைசி இரண்டு வரிகள் மட்டும் உதைக்குது. என்னவோ போங்க ..கடைசி கட்ட வாக்கு பதிவுக்கான stunt மற்றும் போட்டோ op வெற்றிகரமாக முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
20-மே-201919:42:46 IST Report Abuse
oce மக்களை கூட்ட இலவச கேஸ் சிலிண்டர் கல்ர் டிவி கொடுக்கும் கொஞ்ச நேர கூத்துக்கு பல லட்ச்ம் செலவில் போக்குவரத்துபாதிக்கும் வகையில் நடு சாலையில் பந்தல் போட்டு விளம்பரம் படுத்தியது மட்டும் சரியா. அது யார் பணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X