ஆந்திராவில் ஜெகனுக்கு ஆதரவு அலை

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (34)
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலுடன் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.இந்தியாடிவி , சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் தேர்தல் முடிவில் மொத்தம் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 100 முதல் 110 வரையிலான தொகுதிகளை பிடிக்கும். கடந்த ஆண்டில் இந்த கட்சி 67 தொகுதிகளை பிடித்திருந்தது. இம்முறை 40 தொகுதிகள் வரை கூடுதலாக பெற வாய்ப்பு உள்ளது.

இது போல் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் ( சந்திரபாபு நாயுடு),இந்த முறை 40 முதல் 45 தொகுதிகளை மட்டுமே பெற முடியும். கடந்த முறை இந்த கட்சி பெற்ற தொகுதிகள் 102. பா.ஜ.,வுக்கு 4 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்கும். காங்கிரசுக்கு 8 முதல் 12 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழப்பார். ஜெகன்மோகன் ரெட்டி பெரும் மெஜாரிட்டியுடன் முதல்வராவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


லோக்சபாவில் எப்படி ?இது போல் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில்; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றும். எஞ்சிய 7 தொகுதிகளை தெலுங்குதேசம் பெறும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஓட்டுசதவீதம் அதிகரிக்கும் ஆனால் ஒரு தொகுதிகளைகூட பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


ஒடிசாவில் மீண்டும் நவீன்


இது போல் ஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கே (பிஜூஜனதாதளம் ) முதல்வராவார் என்றும் சொற்ப அளவிலான மெஜாரிட்டியே பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 90 முதல் 100 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. நவீன் கட்சிக்கு கடந்த காலத்தை விட தொகுதிகள் குறையும் என்றும் இந்த முறை பா.ஜ., ஒடிசாவில் 35முதல் 40 எம்எல்ஏ.,க்களை கூடுதலாக பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-201912:28:20 IST Report Abuse
Kumaresan Kutty நாயுடு காரு அவுட்டா
Rate this:
Share this comment
Cancel
Ram RV -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201917:43:45 IST Report Abuse
Ram RV நல்லதல்ல. ஆந்திர மக்கள், குறிப்பாக இந்துக்கள் தவறாக வாக்களித்திருக்கிறார்கள். இவர் மிஷனரிகளின் பினாமி. இவர் தந்தை ஏழுமலைகளில் ஒன்றில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட முயற்சித்தார். ஒரு பக்தப் பெருந்தகையால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆந்திர இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
20-மே-201918:26:36 IST Report Abuse
uthappaஅவர் இந்துவாக மாறியது தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மே-201916:35:48 IST Report Abuse
Endrum Indian பேரு மட்டும் ஜெகன் மோகன் ஆனால் பாவாடை இனம் இவன்??? இவன் அப்பா ராஜசேகர் ரெட்டி செய்தது என்ன கிறித்துவர்களை முஸ்லிம்களை திருப்பதி அடிவாரத்தில் மிக ஆழமாக வேரூன்ற வைத்தது, அதுவும் திருப்பதி உண்டியல் பணம் அவர்களுக்கு மைனாரிட்டி என்ற போர்வையில் கொடுத்தது. இந்த மாதிரி இருப்பவர்கள் செய்வது எல்லாம் ஒன்று தான் கொள்ளை அடிப்பது???இவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன??ஆந்திராவிற்கு / ஆந்திர மக்களுக்கு ஒரு நன்மை கூட கிடையாது , அவன் பாக்கெட் நிரம்பும் அவ்வளவு தான் நடக்கப்போகிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X