ஆந்திராவில் ஜெகனுக்கு ஆதரவு அலை| Dinamalar

ஆந்திராவில் ஜெகனுக்கு ஆதரவு அலை

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (34)
Share

புதுடில்லி: லோக்சபா தேர்தலுடன் நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.



latest tamil news




இந்தியாடிவி , சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் தேர்தல் முடிவில் மொத்தம் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 100 முதல் 110 வரையிலான தொகுதிகளை பிடிக்கும். கடந்த ஆண்டில் இந்த கட்சி 67 தொகுதிகளை பிடித்திருந்தது. இம்முறை 40 தொகுதிகள் வரை கூடுதலாக பெற வாய்ப்பு உள்ளது.

இது போல் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் ( சந்திரபாபு நாயுடு),இந்த முறை 40 முதல் 45 தொகுதிகளை மட்டுமே பெற முடியும். கடந்த முறை இந்த கட்சி பெற்ற தொகுதிகள் 102. பா.ஜ.,வுக்கு 4 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்கும். காங்கிரசுக்கு 8 முதல் 12 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


latest tamil news




சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழப்பார். ஜெகன்மோகன் ரெட்டி பெரும் மெஜாரிட்டியுடன் முதல்வராவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


லோக்சபாவில் எப்படி ?



இது போல் லோக்சபா தேர்தலில் ஆந்திராவில்; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை கைப்பற்றும். எஞ்சிய 7 தொகுதிகளை தெலுங்குதேசம் பெறும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஓட்டுசதவீதம் அதிகரிக்கும் ஆனால் ஒரு தொகுதிகளைகூட பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


ஒடிசாவில் மீண்டும் நவீன்


இது போல் ஒடிசாவில் மீண்டும் நவீன்பட்நாயக்கே (பிஜூஜனதாதளம் ) முதல்வராவார் என்றும் சொற்ப அளவிலான மெஜாரிட்டியே பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 90 முதல் 100 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. நவீன் கட்சிக்கு கடந்த காலத்தை விட தொகுதிகள் குறையும் என்றும் இந்த முறை பா.ஜ., ஒடிசாவில் 35முதல் 40 எம்எல்ஏ.,க்களை கூடுதலாக பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X