பொது செய்தி

இந்தியா

கணிப்பு எதிரொலி: பங்குச்சந்தை உயர்வு

Added : மே 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement

மும்பை : நேற்று (மே 19) வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பா.ஜ.,வே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதனால் உற்சாகமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் 942 புள்ளிகளும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் 79 காசுகளும் உயர்ந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர். இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 20, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892.89 புள்ளிகளாகவும், நிப்டி 203.05 புள்ளிகள் உயர்ந்து 11,610.20 புள்ளிகளாகவும் இருந்தது.




சென்செக்ஸ் பொறுத்தவரை, மாருதி, எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், எம் அண்ட் எம், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4 சதவீதத்திற்கு மேல் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே சமயம் பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், எச்சிஎல் டெக் ஆகிய நிறுவன பங்குகள் 2 சதவீதம் சரிவுடன் காணப்படுகின்றன.
பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 272 இடங்களை விடவும் கூடுதலாக பெறும் என்றும், இந்த முறை பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், சந்தை எதிர்பார்ப்புக்களை விடவும் ஆளும் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெறும் என கருத்துகணிப்புக்கள் தெரிவித்துள்ளன. கருத்து கணிப்புக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தால் வளர்ச்சி பாதிக்கப்படும், பொருளாதார மந்தை நிலை ஏற்படும், சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என கருதப்பட்டது. தற்போது கருத்துகணிப்புக்கள் சாதகமாக அமைந்துள்ளதால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்பட்ட போதிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்வுடன் காணப்படுகின்றன.


ரூபாய் மதிப்பும் உயர்வு


பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ள கருத்துகணிப்பு முடிவுகளை முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதால், ரூபாய் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 20, காலை 9.15 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69.44 ஆக உள்ளன. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 70.23 ஆக இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-மே-201911:52:19 IST Report Abuse
ஆரூர் ரங் சாதாரணர்களுக்கு  இதனால் என்ன பலன்? நேரடி முதலீடு, பரஸ்பர நிதி, இன்சூரன்ஸ், ஓய்வுநிதிகள் மூலம் மறைமுகமாகவும் பத்துகோடிபேருக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் எல்லோரும் பணக்காரர்களல்ல.
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
20-மே-201911:27:47 IST Report Abuse
Pandiyan பங்குசந்தை வீழ்த்துவிட கூடாது என்பதற்காகவே இந்த கருத்துக்கணிப்பு வந்திருக்கு போல ..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-மே-201911:09:41 IST Report Abuse
blocked user இந்த ஓரிரு நாட்களில் கோடிகளில் லாபம் பார்த்துவிடலாம் போல இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X