மீடியா மீது குமாரசாமி பாய்ச்சல்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (24)
Advertisement

பெங்களூரு : மீடியாக்கள் அரசியல்வாதிகளை சிறுமைப்படுத்துகின்றன. அவை கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்., கூட்டணி அரசின் வாழ்நாள் குறித்து சந்தேகங்களை எழுப்புகின்றன. மீடியாக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கொந்தளித்துள்ளார்.







துாக்கம் இழக்கிறேன் :


செய்தி நிறுவனம் ஒன்றுக்கு குமாரசாமி அளித்த பேட்டியில், '' மீடியாக்கள் அரசியல் வாதிகளை தொடர்ந்து சிறுமைப்படுத்துகின்றன. கார்ட்டூன் கதாபாத்திரங்களை போல நினைக்கின்றன. இப்படி கேலி செய்ய மீடியாக்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?. மீடியாக்கள் யாருக்கு சாதகமாக செயல்படுகின்றன என்பது மக்களுக்கு தெரியும். 6.5 கோடி கர்நாடக மக்களின் ஆதரவில் தான் அரசு செயல்படுகிறதே தவிர, மீடியாக்களால் அல்ல. நான் தொடர்ந்து டி.வி.,க்களை பார்த்தால், துாக்கத்தை தான் இழப்பேன்.





ஆட்சி நீடிக்கும் :


மீடியாக்கள், மே-23 தேர்தல் முடிவுகளுக்கு பின் கர்நாடக அரசு நீடிக்குமா என்று சந்தேகத்தை எழுப்புகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சித்தராமய்யா நல் ஆசியுடன், கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும்,'' என்றார்.


'டெம்பிள் ரன்' :


மேலும், '' பிரதமர் மோடி கேதார்நாத், பத்ரிநாத் சென்றால் அதை புனிதப் பயணம் என்கின்றன. எதிர்க்கட்சி தலைவர்கள் கோவிலுக்கு சென்றால், இதே மீடியாக்கள் அதை 'டெம்பிள் ரன்' (வீடியோ கேம்) என்றே சித்தரிக்கின்றன. பிரதமர் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே கேதாரிநாத் சென்றார்,'' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-201917:53:31 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆட்சி கவிழ்வது நிச்சயம். ஆகவே முதல்வர் நாற்காலியை கடைசியாக ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் செய்த கோமாளித்தனத்தால் இந்த முறை மக்கள் காங்கிரசிற்கு வாக்களிக்கவில்லை. அவர்களுக்கு ஓட்டுப்போட்டால் ஏதாவது ஒரு சிறிய கட்சி ஆட்சி அமைக்க முட்டுக்கொடுக்கும். ஆகவே அவர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று கருநாடக மக்கள் உணர்ந்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
20-மே-201917:38:48 IST Report Abuse
Kannan குமாரசாமிக்கு ஒன்னு அழ தெரியும் அல்லது பாய தெரியும். சொல்ப எமஎல்ஏ க்களுடன் மற்றவனை நம்பி ஆட்சியில் அமர்ந்தால் இந்த நரக வேதனை தான். படட்டும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-மே-201917:17:24 IST Report Abuse
அசோக்ராஜ் இந்தியா பூரா குடும்ப கொள்ளையர்களை கதற விடுறாரே மோடி, அதுக்காகவே ஆண்டவன் அவருக்கு எக்ஸ்ட்ரா பத்து வருசம் ஆயுள் தரணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X