அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்து கணிப்பு : இ.பி.எஸ்., ஸ்டாலின் கருத்து

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement

சேலம் : தற்போது வெளிவந்துள்ளது கருத்துக்கணிப்பல்ல ; இது கருத்து திணிப்பு. கடந்த 2016 ல் நானே தோற்பதாக கணிப்பு சொன்னது. ஆனால், நான் வெற்றிபெற்றேன் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.latest tamil newsகருத்து திணிப்பு :


சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், '' தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். 2016 ல் கருத்து கணிப்பை பொய்யாக்கினோம். அதேபோல் இந்தமுறையும் பொய்யாக்குவோம். புதுவை உள்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றிபெறும்,'' என்றார்.


மக்கள் கணிப்புக்கு காத்திருப்பு :


latest tamil news


தி.மு.க.,வை பொறுத்தவரை கருத்துக்கணிப்புகள் சாதகமாக வந்தாலும் ஒருவேளை பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. மே 23 ல் வெளியாகும் மக்கள் கணிப்புக்காக காத்திருக்கிறோம், என்றார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், '' லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும். மே-23 க்கு பின்னர் தான் மத்திய அரசில் அங்கம் வகிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று தெரிவித்த ஸ்டாலின், மே 23 அன்று டில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக உங்களுக்கு யார் சொன்னது ? ; ஊடகங்கள் நீங்களே செய்தியை போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்கிறீர்கள், என்றும் விமர்சித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-மே-201906:01:26 IST Report Abuse
madhavan rajan இவருடைய தந்தை அவரே கேள்விகள் கேட்டு அவரே பதில் எழுதி ஊடகங்களுக்கு அளிப்பார். அதே ஞாபகம் இவருக்கு.
Rate this:
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
21-மே-201907:25:08 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) தமிழக மக்கள் அதிர்ச்சி இந்தியா திரும்பிப் பார்க்கிறது . 20 தொகுதிகளில் மக்கள் பேதி மையமும் , 20 தொகுதிகளில் நாம் டுமீளரும் , வெற்றி பெற்றன . இவர்களில் ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய , அகில இந்திய கட்சிகள் ஆர்வம் . டெல்லியில் பரபரப்பு ........கி கி கி .
Rate this:
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
20-மே-201920:56:54 IST Report Abuse
ravichandran கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் வாசகர்களின் கருத்துக்கள் படிக்க இன்ரஸ்டிங்கா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X