அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா?

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (61)
Advertisement

சென்னை; லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 அன்று புதுடில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா அனைத்து எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டத்தை நடத்துகிறார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் அழகிரியும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.






சென்னை, கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், '' லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்படும். மே-23 க்கு பின்னர் தான் மத்திய அரசில் அங்கம் வகிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்று தெரிவித்தார்.
மேலும், மே 23 அன்று டில்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? ; ஊடகங்கள், நீங்களே செய்தியை போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்கிறீர்கள், என்றும் விமர்சித்தார்.


கே.எஸ். அழகிரி :


ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' மே 23 அன்று டில்லியில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை மனதில் வைத்தே கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்து கணிப்பு என்ற பெயரில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன.





அந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் நிச்சயம் தி.மு.க., பங்கேற்கும்,'' என்றார். மே 23 எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதற்கு சோனியா, தி.மு.க., தலைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இரு தலைவர்களின் முரண்பட்ட கருத்துகளால், அரசியல் நோக்கர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
24-மே-201908:09:40 IST Report Abuse
oce எங்கே எவனையும் காணோம். அமுக்கனுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
24-மே-201908:03:08 IST Report Abuse
oce கூலி கொடுத்து சூனியம் வைத்துக்கொண்டனர். ஏதாவது ஒன்றுக்கு ஆசைப்பட்டிருந்தால் நிறை வேறி இருக்கும். அப்பனுக்கு மேல் பேராசை. எல்லாத்தையும் கட்டி அடக்கியாளவேண்டுமென்ற பேராசை. திமுகவினர் வடநாட்டுக்காரன்களை திட்டுபவர்கள். கையூட்டு வாங்கிய தமிழ் நாட்டு மக்கள் திமுகவினரை வடநாட்டுக்காரன்களிடம் திட்டு வாங்க அனுப்பி விட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-மே-201902:18:34 IST Report Abuse
meenakshisundaram திமுக இப்போ எங்கிட்டு போயி நிக்கும்? துரை கூறியது உண்மை ஆகோணும்னா ஸ்டாலின் இப்ப இருந்தே ஹிந்தி படிக்க ஆரம்பிக்கணுமே?அப்போதானே அடுத்த (?) சனாதிபதி ஆவூரது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X