கூட்டணி தலைவர்களுக்கு நாளை அமித்ஷா விருந்து

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (39)
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ள நிலையில், நாளை புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.







விருந்து :


லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23 அன்று வெளியாக உள்ள நிலையில், பா.ஜ., தலைமையிலான கட்சிகளுக்கு அமித்ஷா இந்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்பர் என்று தெரிகிறது.


மீண்டும் மோடி :


ஊடகங்களின் கருத்து கணிப்புகளை பொறுத்தவரை, அனைத்தும் ஒரே குரலில் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடந்தால், காங்கிரஸ் அல்லாத கூட்டணி 2 வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரியும்.






மோடிசுனாமி-2019 :


கடந்த 2014 ல், நாடு முழுவதும் மோடி அலை இருந்தது. அதன் காரணமாக பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்றது. எனினும், அதன் தலைமையில் கூட்டணி ஆட்சியே அமைந்தது. ஆனால், இந்தமுறை வெறும் மோடி அலை மட்டுமல்ல, 'மோடி சுனாமி-2019' என்பதை கணிப்புகள் காட்டுவதாக, அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


எதிர்க்கட்சிகள் தாமதம் :


இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அளிக்க உள்ள விருந்து முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் மே 23 அல்லது அதற்கு பின்னரே நடக்கும் என்றே தெரிகிறது.


அமைச்சரவை :


நாளை (மே 21) மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalingam Ponnambalam - chennai,இந்தியா
20-மே-201921:02:23 IST Report Abuse
Mahalingam Ponnambalam அக்னி வெயில்ல எல்லாம் கருகி போச்சி
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
20-மே-201920:49:13 IST Report Abuse
natarajan s இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் வெறும் கருத்து கணிப்புகளை Exit polls மட்டும் வைத்து அரசே அமைத்த மாதிரி கருத்துக்கள் உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களின் தேர்தல் ஒத்துழைப்புக்கு ஆமிட்ஷா விருந்து கொடுப்பது தவறா? தேர்தல் முடிவுகள் மாற்றி அமைந்தால் விருந்து கொடுக்க முடியுமா? அதுதான் இப்போதே விருந்து ஏற்பாடு. Ap
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
20-மே-201919:02:52 IST Report Abuse
Ramakrishnan Natesan இதில் அமலாக்க துறை தேர்தல் ஆணையர் மற்றும் INCOMETAX அதிகாரிகளும் வருவார்களா அவர்களுடன் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற்றனர் ஆகவே அவர்களையும் அழையுங்கள்
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைநடேசனுக்கு தனி அழைப்பாம். அவன் கூட நல்லா உழைத்தானாம். சபரீசன் கொடுத்த செய்தி...
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
20-மே-201919:49:29 IST Report Abuse
Ramakrishnan Natesanஅப்போ ஒத்து கொல்லுகிறீர் அடோனோம்ஸ் body எல்லாம் மோடியின் கைப்பாவை என்று...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X