கூட்டணி தலைவர்களுக்கு நாளை அமித்ஷா விருந்து| Dinamalar

கூட்டணி தலைவர்களுக்கு நாளை அமித்ஷா விருந்து

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (39)

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ள நிலையில், நாளை புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.







விருந்து :


லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23 அன்று வெளியாக உள்ள நிலையில், பா.ஜ., தலைமையிலான கட்சிகளுக்கு அமித்ஷா இந்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்பர் என்று தெரிகிறது.


மீண்டும் மோடி :


ஊடகங்களின் கருத்து கணிப்புகளை பொறுத்தவரை, அனைத்தும் ஒரே குரலில் மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடந்தால், காங்கிரஸ் அல்லாத கூட்டணி 2 வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை புரியும்.






மோடிசுனாமி-2019 :


கடந்த 2014 ல், நாடு முழுவதும் மோடி அலை இருந்தது. அதன் காரணமாக பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்றது. எனினும், அதன் தலைமையில் கூட்டணி ஆட்சியே அமைந்தது. ஆனால், இந்தமுறை வெறும் மோடி அலை மட்டுமல்ல, 'மோடி சுனாமி-2019' என்பதை கணிப்புகள் காட்டுவதாக, அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


எதிர்க்கட்சிகள் தாமதம் :


இந்தநிலையில், தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அளிக்க உள்ள விருந்து முக்கியத்துவம் பெறுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் மே 23 அல்லது அதற்கு பின்னரே நடக்கும் என்றே தெரிகிறது.


அமைச்சரவை :


நாளை (மே 21) மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை குழு கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X