பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

Added : மே 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : தமிழகத்தில், அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆயவு மையம் தெரிவித்துள்ளது.உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்றும், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் குறிப்பிட கூடிய அளவில் எங்கும் மழை இல்லை என்றும் வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
20-மே-201916:01:40 IST Report Abuse
புரோகிதர் சொடலை ஆமா அதுக்கு முன்னாடி வீங்கிளவேனில் வந்து வீசிச்சாக்கும்
Rate this:
Share this comment
Cancel
R S BALA - Chennai,இந்தியா
20-மே-201915:36:56 IST Report Abuse
R S BALA அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும், 3 வது நாள்லேருந்து தென்றல் காத்து வீசுமா? வெந்து நொந்து போற நேரத்துலே இவிங்க வேற ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X