பொழுதுபோக்கு செய்தி : சந்திரபாபுவை கிண்டலடித்த சிவசேனா

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சிவசேனா, சாம்னா, பொழுதுபோக்கு செய்தி, கிண்டல்

மும்பை ; கடந்த 3 நாட்களாகவே, பா.ஜ., அல்லாத ஆட்சியமைக்க, சோனியா, ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதனை பொழுதுபோக்கு செய்தி சிவசேனா கட்சி கிண்டலடித்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதை, தனது செய்தி இதழான சாம்னா மூலம் சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. எதிர்க்கட்சியினரை சந்திரபாபு சந்திப்பது, அவர் தோல்வி அடையப் போவதைக் காட்டுவதாக கூறியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீடிக்குமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னர் தெரிந்து விடும் என்றும், மோடியின் இந்துத்வா கொள்கைக்கும், எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை கொள்கைக்கும் இடையே தற்போது சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றாகும்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sachin - madurai,இந்தியா
20-மே-201916:05:11 IST Report Abuse
sachin Oru karuthukaippukae intha aattama... Vote pottathu 125 crore people's.... Channels got only 10,000 people's.... No one is not given correct vote position in outside... Wait and see
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X