ம.பி., காங்., அரசுக்கு புதிய சிக்கல்

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (5)
Advertisement

போபால் ; மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசினை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. இதனால், எளிய பெரும்பான்மையில் உள்ள முதல்வர் கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பா.ஜ.,விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார்.

230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா (பா.ஜ.,) கூறுகையில், ''மத்திய பிரதேச சட்டமன்ற சிறப்பு அமர்வை விரைவில் கூட்டும்படி கவர்னருக்கு கடிதம் எழுத உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அரசின் ஸ்திரத்தன்மையை சோதிக்கவும் விரும்புகிறோம்.
முடிவுகள் எடுப்பதிலும், நிதி விவகாரங்களிலும் இந்த பலவீனமான காங்கிரஸ் அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்புகிறோம். அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த முயற்சியையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன,'' என்றார்.
மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ., முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி இந்த காங்கிரஸை சும்மா விடக்கூடாது. முறபகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வள்ளுவரின் கூற்றை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போது தான் அவர்கள் செய்த கொடுமைகள் அவர்களுக்கு புரியும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-மே-201918:27:03 IST Report Abuse
A.George Alphonse After 23 May Lokh Sabha Election result the BJP will start it's number game if it's get absolute majority.If not it will remain in silence for some time.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மே-201918:14:18 IST Report Abuse
Malick Raja இனி தொடங்க வேண்டியதுதானே .. 23.ந்தேதிக்கு பிறகு ... என்னென்ன நடக்குமோ அது மட்டுமே நடக்கும் .. இறுதியாத்திரையும் நினைவில் கொள்ளவேண்டியதும் அவசியமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X