Chandrababu Naidu to meet Mamata; discuss post-poll alliance | மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு| Dinamalar

மம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு

Updated : மே 20, 2019 | Added : மே 20, 2019 | கருத்துகள் (19)
மம்தா, சந்திப்பு, சந்திரபாபு நாயுடு

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேச தலைவரான, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.
அதன்படி காங்., தலைவர், ராகுல்; தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார்; இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், டி.ராஜா, ஜி.சுதாகர் ரெட்டி; லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர், சரத் யாதவ் பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி; சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.





இந்நிலையில் இன்று கோல்கட்டா சென்று ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.தேர்தலுக்கு பிந்தை கருத்து கணிப்புகள் பா.ஜ. கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு படலம் தொடர்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X