பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் பயங்கரவாத தடுப்புபிரிவு துவக்கம்

Added : மே 20, 2019
Advertisement
 புதுச்சேரி, பயங்கரவாத, தடுப்புபிரிவு, துவக்கம்

புதுச்சேரி:இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுப்படி ,புதுச்சேரி போலீசில் பயங்கரவாத தடுப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று சர்ச்சுகள், ஓட்டலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தன. இதில் 250 க்கும் மேல் பலியாகினர். 500க்கும் மேல் காயமடைந்தனர். இது குறித்து பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இலங்கை சென்ற தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியா, அமெரிக்கா நாடுகள் கவனமாக இருக்குமாறு எச்சரித்தன.
தமிழகம் உட்பட பல கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. சுற்றுலா தலம் அதிகம் உள்ள புதுச்சேரி போலீசில் பயங்கரவாத தடுப்பு பிரிவு துவக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதன்படி புதுச்சேரியில் டி.ஜி.பி., சுந்தரி நந்தா இப்பிரிவை துவக்க உத்தரவிட்டார். இப்பிரிவில் எஸ்.ஐ., மனோஜ் தலைமையில் 18 போலீசார் பணியில் இருப்பர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X