அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பொறுப்புகளில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ., ராஜினாமா

Added : மே 20, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கட்சி, பொறுப்பை, உதறினார், தோப்பு

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை, எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் தோப்பு வெங்கடாசலம். தனக்கு மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவி வழங்க வேண்டும், என முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தும், நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு, தோப்பு வெங்கடாசலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், 'எனது சூழல் காரணமாக, மாநில ஜெ., பேரவை இணை செயலர் பதவி உட்பட கட்சியின் பிற பொறுப்பு களில் இருந்து விலகி, சாதாரண தொண்டனாக தொடர விரும்புகிறேன்' என, தெரிவித்துள்ளார்.
வரும், 23ல் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அப்போது, அ.தி.மு.க., அரசு பெரும்பான்மையை நிலை நாட்டும் சூழல் தேவை. அல்லது, ஆட்சி மாற்றம், ஆட்சியை கவிழ்க்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இந்த பரபரப்பான சூழ்நிலையில் தோப்பு வெங்கடாசலம் கட்சி பொறுப்பிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
23-மே-201911:42:37 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> aduththu thimukale கழுவித்துடைக்க போயிருவாங்க பாத்துண்ணே இருங்க இந்தமாரி ஒருத்தர் அதிமுக லே இருந்தாங்களா ?யாருக்காச்சும் தெரியுமா சாமி
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மே-201923:32:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நிம்மதியா கொஞ்ச நேரம் உக்கார விட மாட்டேங்கிறாய்ங்களே.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மே-201923:29:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக இவரை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்கிறார் அதிமுக கட்சி கொறடா அமீத் சா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X